
டெல்லி:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இன்றுகாலை காங்கிரஸ்கட்சி தலைவர் சோனியாகாந்தியை ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது தமிழகம் மற்றும் தேசிய அரசியல்சூழல் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.
Patrikai.com official YouTube Channel