ஓசூர்: ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஓசூர் தொரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே ருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைய உள்ள ஓசூர் விமான நிலையத்துக்கு, சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.  இதை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்  இன்று தொடங்கியுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த மாநாடு மூலம்,  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,   கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு நடைபெறும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், முதலீட்டு வாய்ப்புகளையும் இந்த மாநாடு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

தொழில்துறையில் தமிழ்நாடு வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில்துறையில் வேகமாக செயல்பட காரணம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. தமிழ்நாடு தொழில்துறையில் இவ்வளவு வேகமாக செயல்பட முக்கிய காரணம் துடிப்பான, இளமையான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாதான். கடந்த மாதம் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் ஆலையை தொடங்கி வைத்து முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றேன். முதலீட்டாளர்களின் ஆர்வமும் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடன் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்தோம். தொழில்துறைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தி தொழில் செய்யும் சூழலை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தான் முதலீட்டாளர்கள் சந்திப்பை தொடர்ந்து நடத்தி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர் என்று கூறினார்.

மேலும்,  ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரம் எனக் கூறப்பட்ட ஓசூர் விருப்பமான நகரமாக உருவெடுத்தது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளதுடன்,  ஓசூரின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில்,  2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

இதுமட்டுமின்றி, சுமார்   5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடியில் ஐடி பார்க் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தவர்,  ஓசூரை நோக்கி தொழிற்சாலைகள்  சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன ஓசூர் அறிவுசார் முனையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். * வளர்ச்சியின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக ஓசூர் இருக்கிறது. * நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றவர்,  ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால்,  எஃகு போன்ற உறுதியோடு சொல்கிறேன், என் இலக்கில் வெற்றி பெறுவேன். தமிழ்நாடு உடன் பயணித்தால் கண்டிப்பாக வெற்றிதான், அதனால் எப்போதும் தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள்/

இவ்வாறு உரையாற்றினார்.