கோவை:
சிறுவாணி  ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்டும் முயற்சியை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவையில் போராட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட தி..மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலி்ன், “ 1969 ம் ஆண்டு  தி.மு.க ஆட்சியில் தான் சிறுவாணிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. தி.மு.க ஆட்சியில் ஒரு குண்டுமணி கூட கேரள அரசு அணை கட்ட முயலவில்லை” என்றார்.
இது குறித்து மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈசுவரன்  எழுதியுள்ள முகநூல் பதிவு:

ஸ்டாலின்
ஸ்டாலின்

“திரு ஸ்டாலின் அவர்களே !!
அந்த ஒப்பந்த்த்தை முழுமையாக படித்தீர்களா?? பவானிப்படுகையில் 2.5 tmc தண்ணீரை கேரளா எடுத்துக்கொள்ள அந்த ஒப்பந்த்த்தில் ஒத்துக்கொண்டுள்ளது. இது ஏன் தளபதியே??
1969 கேரளா தமிழ்நாடு ஒப்பந்தப்படி பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் கேரள அரசு இடைமலை ஆற்றில் அணை கட்டியபின்பு தமிழகம் ஆணைமலையாற்றில் அணை கட்டி 2.5 tmc நீரை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளதே!  அதை நிறைவேற்ற இதுவரை தங்கள் ஆட்சியில் ஏன் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை தளபதியாரே?
ஈசுவரன்
ஈசுவரன்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007 ம் ஆண்டு வந்தபோது நீங்கள் தானே ஆட்சியில் இருந்தீர்கள் அப்போது அந்த தீர்ப்பில் 1969 ஒப்பந்த்த்தைவிட அதிகமான உரிமையை கேரளா பெற்றபோது நீங்கள் ஏன் இது குறித்து மேல் முறையீடு செய்யவில்லை?
உங்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்தபோது தான் 1970 ம் ஆண்டில் கேரளா சிறுவாணி நதியின் குறுக்கே சித்தூரில் அணை கட்ட தொடங்கியது.அணைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதும் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தான். 6.5 km நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டதும் அப்போது தான் . அணைகட்ட 14 கோடி கேரள அரசு செலவழித்ததும் அப்போது தான்
குப்பையை கிளறினால் நாற்றம் எடுக்கும் தளபதி அவர்களே!
இருவரும் மாறிமாறி குற்றம் சொல்வதை விட்டுவிட்டு சிறுவாணி பிரச்சனையில் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சியுங்கள் தளபதியாரே!” என்று ஈசுவரன் குறிப்பட்டுள்ளார்.