சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 5வது ஆண்டில் காலடி எடுத்துள்ள நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக  ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நேற்றுடன்  (6.5.2025) நான்காண்டுகள் நிறைவடைந்து, இன்று (மே 7ந்தேதி)  5 ஆம் ஆண்டு ஆட்சியில் தொடர்கிறது. இதையடுத்து,  தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி