சென்னை: பழனி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், மின்தூக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து றைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்கள் 18 பேருக்கு குடும்ப பராமரிப்பு உதவித்தொகை ரூ.25,000-க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனி கோயிலில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதான கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டப பணிகள் ஆகியவை நிறைவடைந்தன. அவைகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தொடர்ந்து, மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்கள் 18 பேருக்கு குடும்ப பராமரிப்பு உதவித்தொகை ரூ.25,000-க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.