சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தி திமுகவினருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தி.நகரில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டார். அதன் காரணமாக அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டார்.
அப்போது, அவர் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு தி.மு.க., உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
தமிழகத்தின் பல இடங்களில் ஏராளமான தி.மு.க.,வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.