சென்னை: கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் சட்டக்கல்வி இயக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் சட்டக்கல்வி இயக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அடுத்ததாக, 32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள குற்ற வழக்கு தொடர்வு துறையின் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் (நீதிமன்றங்கள்) துறை சார்பில் 32.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குற்றவழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.24.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் விதைப்பண்ணைகள், உட்கட்டமைப்பு வசதிகள், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன்பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையம், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தாமேலும், கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தார்.