சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி, 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன் கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.