சென்னை:
பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். அவருக்கு அரசர் சார்லஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா – பிரிட்டன் உறவு மேலும் வலுப்பெறும் எனவும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.