ஈரோடு பெருந்துரையில் நடைபெற்ற 2 நாட்கள் மண்டல மாநாட்டின் நிறைவு விழா கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது தமிழக அரசை விமர்சித்தும், ரஜினி, கமல் போன்றோரின் புதிய கட்சிகள் குறித்தும் விமர்சித்து பேசினார். அப்போது, கட்சி தொடங்குவதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணமென்ன என்று பேசியபோது தொடர்ந்து, பூனை மேல் மதில் என்று பேசினார். இது கூட்டத்தினரிடையே சிரிப்பை வரவழைத்தது.
மதில்மேல் பூனை என்பதற்கு பதிலாக, பூனை மேல் மதில் என்று ஸ்டாலின் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே என்று, யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே என்பதை மாற்றி பேசிய நிலையில், தற்போது மதில் மேல் பூனை என்ற பழைமொழியையும் மாற்றி பேசியுள்ளார்.
ஏற்கனவே பலமுறை ஸ்டாலின் இதுபோல தவறுதலாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் பேசிய வீடியோ…
https://www.youtube.com/watch?v=FKO0wpjtzqo&feature=youtu.be