சென்னை: சட்டப்பேரவைக்குள் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்து வந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை எப்படி வாபஸ் பெற முடியும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்து காட்டினார். இது சட்டப்பேரவை விதியை மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை, திமுக தற்போது வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழநாட்டில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த காலங்களில் திமுகவினர் மீது போடப்பட்ட பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அதுபோல ஊழல் வழக்குகளில் இருந்தும் பல அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இது நீதித்துறை மற்றும் காவல்துறை மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை மற்றும் விஜிலன்ஸ் துறையினர் பச்சோந்தி போல ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
இநத் நிலையில், சட்டப்பேரவைக்குள் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்து வந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை எப்படி வாபஸ் பெற முடியும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அதாவது, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சில திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக 2020-ம் ஆண்டு தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பிப்ரவரி 2021-ல் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற தமிழக சட்டப் பேரவை செயலகம் மற்றும் அதன் சிறப்புரிமைக் குழுவின் உரிமை என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மக்களவையில் குட்கா பேக்கேஜ்களை காட்சிப்படுத்தியதற்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் பட்டியலிடப்பட்டபோது, மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெறுவதாக மேல்முறையீடு செய்தவர்கள் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (ஏபிபி) ஆர்.முனியப்பராஜ் வாதிட்டார்.
ஆனால், 2021-ம் ஆண்டு மே மாதம் மாநிலத்தில் திமுக ஆட்சியைப் பிடித்ததால், மேல்முறையீட்டு மனுதாரர்கள் அவ்வாறு செய்வது எவ்வளவு நியாயம் என்று பெஞ்சில் இருந்த மூத்த நீதிபதி கேட்டார்.
ஒரு ஆட்சியின் போது மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து, அடுத்த ஆட்சியின் போது அதை திரும்பப் பெற அனுமதித்தால், நீதித்துறையைப் பற்றி ஒரு சாமானியர் என்ன நினைப்பார்கள் என்று கேட்ட நீதிபதி, ஒரு சாதாரண அரசு ஊழியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீட்டை அரசு திரும்பப் பெறுமா என்று கேட்டார்.
இதுதொடர்பாக, ஜூலை 2-ஆம் தேதிக்குள் சட்டமன்றச் செயலகம் மற்றும் சிறப்புரிமைக் குழுவிடமிருந்து இந்தப் பிரச்சினை குறித்து முறையான வழிமுறைகளைப் பெறுமாறு அவர் உத்தரவிட்டார்.
அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை முன்னிலைப்படுத்தும் வகையில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவையில் குட்கா பாக்கெட்டுகள் காட்டப்பட்டன. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கும், மற்ற திமுக எம்.எல்.ஏக்களுக்கும் சிறப்புரிமைக் குழு வழங்கிய முதல் ஷோ காஸ் நோட்டீஸ் ஆகஸ்ட் 2020 இல் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ம் ஆண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடைகளில் தடையற்று விற்பனை செய்யப்படுவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக குட்கா பாக்கெட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ-க்கள் எடுத்து வந்தனர். இது உரிமை மீறல் என குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை செய்யப்பட்ட குட்காவை எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவைக்கே எடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இது அவர்களுக்கு எங்கே கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் தனபால் எதிர்கட்சிகளின் செயலை உயர்மட்ட விசாரணைக்கு அனுப்புவோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணை பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வீடியோக்களை ஆய்வு செய்த உரிமை குழு ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், அவர்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு உரிமைக்குழு விசாரணைக்கு தடை பெறப்பட்டது.