சென்னை:
கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசு செய்திக் குறிப்பில், “இன்று (9-5-2021) காலை 11-30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், கீழ்க்காணும் அமைச்சர்கள் முதல்வரால் நியமிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.