சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும்,  கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்கவும்  ‘வார் ரூம்’ அமைக்க  தலைமைச்செயலருக்கு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க அவசரமாக ‘கட்டளை மையம்’ (War Room) ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என தலைமை செயலரிடம் அறிவுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்த த நாளை (மே 6) முதல் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,  ‘மருத்துவ அவசர நிலை’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்நோயின் தீவிரம் இருப்பதால் அவசரமாக ‘கட்டளை மையம்’ (War Room) ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என தலைமைச் செயலாளரிடம்  கூறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ‘மருத்துவ அவசர நிலை’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், அதை தடுக்கும் வகையில்,  அவசரமாக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) ஒன்றை உடனடியாகத் திறக்கக் கூறியுள்ளேன். ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.