குவைத்தில் நர்சு பணிக்கு இந்திய பெண்களை தேர்வு செய்ய கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட 6 முகமைகள் மூலம் மட்டுமே குவைத் நர்சு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்வு முறையில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக இத்தகைய நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் நர்சு தேர்வு செய்வது தொடர்பாக தூதரகத்தை அணுகியதை தொடர்ந்து இந்த அறிவிப்பை தூதரகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இசிஆர் எனப்படும் குடியேற்ற விசாரணைனை இதற்கு கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறது துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ‘‘ குடியேற்ற சட்டம் 1983ன் படி குடியேற்ற காப்பாளரிடமிருந்து குடியேற்ற அனுமதி பெறாமல் வெளிநாடு செல்ல முடியாது. வெளிநாடு செல்லும் இந்தியர்களை காப்பதற்காக இந்த நடைமுறை அமலில் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்ற நடைமுறையில் தொடர்புடைய இந்தியன் மிசன்ஸ், குடியேற்ற காப்பாளர் ஜெனரல், குடியேற்ற காப்பாளர், ஊழியர்கள், திட்ட ஏற்றுமதியாளர்கள், ஆட்கள் தேர்வு முகமைகள், இன்சூரன்ஸ் முகமைகள் என அனைத்து தரப்பும் தானியங்கி முறையில் குடியேற்ற துறையுடன் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது 17 நாடுகளுக்கு பணிக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்தியாவில் அனைத்து பாஸ்போர்ட்களும் குடியேற்ற ஒப்புதல் பெற்றவை தான். எனினும் குவைத் மற்றும் ஆப்கன், பக்ரைன், ஈராக், இந்தோனேசியா, சவுதி அரேபியா, ஜோர்டன், லிபியா, லெபனான், மலேசியா, ஓமன், கத்தார், சூடான், சிரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 17 நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் குடியேற்ற அனுமதி பெறும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த நாடுகளுக்கு பணி தொடர்பாக இல்லாமல் இதர பயணங்களுக்கு குடியேற்ற அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
வளைகுடா நாட்டில் பணிபுரியும் ஒரு நர்சு கூறுகையில்,‘‘ தனியார் ஆட்கள் தேர்வு முகமை மூலம் நர்சு பணிக்கு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வருகின்றனர். இந்தியாவை விட இங்கு அதிக சம்பளம் கிடைக்கும். ஆனால், இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை கமிஷனாக ஏஜெட்களுக்கு கொடுக்க வேண்டியுள்ளது’’ என்றார்.
‘‘குடியேற்ற நடைமுறை மூலம் இந்திய நர்சுகள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வது சுலபம். வெளிப்படைத் தன்மை மற்றும் எளிமையாகவும் இருக்கிறது. குவைத் மருத்துவமனைகளுக்கு இந்திய நர்சுகளை தேர்வு செய்யும், சம்மந்தப்பட்ட குவைத் ஆட்கள் தேர்வு முகமை குடியேற்ற நடைமுறையில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதற்காக பதிவு செய்ய தூதரகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
நோர்கா ரூட்ஸ் சென்டர், திருவனந்தபுரத்தில் உள்ள ஓவர்சீஸ் டெவலப்மென்ட் மற்றும் எம்ப்ளாயின்ட்மென்ட் பிரமோஷன் கன்சல்டன்ட்ஸ், சென்னையில் உள்ள ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன் லிட்., கான்பூரில் உள்ள உபி பைனான்சியல் கார்ப்பரேஷன், ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா ஓவர்சீஸ் மேன் பவர் கம்பெனி, ஆந்திரா விஜயவாடாவில் உள்ள ஓவர்சீஸ் மேன்பவர் கம்பெனி ஆகிய ஆட்கள் தேர்வு முகமைகள் தற்போது இந்திய நர்சுகளை குடியேற்ற அனுமதி பெற வேண்டிய 17 நாடுகளில் பணியமர்த்துவதற்காக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.