சென்னை:
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், ‘இ.ஓ.எஸ்., – 02, ஆசாதிசாட்’ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, நேற்று விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது, செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.

இதற்காக குழு அமைக்கப்பட்டு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும்’ என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.