பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரு வெற்றி படங்களுக்கு பிறகு தெலுங்கு பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்டு செய்து வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
ஜுனியர் என்.டி.ஆர். – ராம்சரண் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் அலியா பட், அஜய் தேவ்கான் போன்ற இந்தி நடிகர்களுடன் ஐரிஷ் நடிகை அல்லிசன் டோடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சினிமா அக்டோபர் மாதம் வெளியாகிறது என பதிவிட்டுள்ளார்.

இதனால் ஜுனியர் என்.டி.ஆர். – ராம்சரண் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். எனினும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி படுத்தவில்லை.
இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு தான் ஆரம்பித்துள்ளது.
கிராபிக்ஸ் வேலைகள் மாதக்கணக்கில் நீடிக்கும்.
தவிர, கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், இந்த நேரத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் விரும்பவில்லை.
400 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம், கொரோனா காரணமாக ஒரு ஆண்டு முடங்கி கிடந்துள்ளது.
இப்போது பட்ஜெட் அதிகரித்து இருக்கும். எனவே இயல்பான சூழல் திரும்பிய பிறகே ஆர்.ஆர்.ஆர். வெளியாகும்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]