சென்னை:
கோயம்பேட்டில் எஸ்ஆர்எம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியை காலி செய்வதாக ரவி பச்சமுத்து உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவில் கூறி உள்ளார்.
கோயம்பேட்டில் 8 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து, SRM டிராவல்ஸ் நிறுவனம் நடத்துவதாக ரவி பச்சமுத்து மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ரவி பச்சமுத்து முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, ரவி பச்சமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், நீதிமன்றம் உத்தரவிட்டால் இடத்தை காலி செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இடத்தை SRM டிராவல்ஸ் நிறுவனம், வாடகை செலுத்தி பயன்படுத்தி வருவதாகவும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் புகாருக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் ரவி பச்சமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1srm-pic-2
கோயம்பேட்டில் எஸ்ஆர்எம் டிராவல்ஸ் அமைந்துள்ள இடம்  இந்திராணி கோபிநாத் என்பவருக்கு சொந்த மானது. சுமார் 4 ஏக்கர் அளவு உள்ள அந்த நிலம்.  கோயம்பேடு  100 அடி சாலையில் உள்ளது. அந்த இடத்தில் எஸ்.ஆர்.எம்.பணிமனை அமைத்து  அமைத்து நிர்வகித்து வருகிறது.
எஸ்ஆர்எம் பணிமனை அமைந்துள்ள இடம்  குறித்து,  சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த மாதவராவ்  தாக்கல் செய்த மனுவில், தனக்கு சொந்தமான 8 கிரவுண்ட்  நிலத்தை ரவி பச்சமுத்து ஆக்கிரமித்துள்ளார் என்று கூறியுள்ளார.
இதுதவிர டெய்சி ராணி, ஏ.வி.கே ராஜா, மகேஷ்ராஜா மற்றும் லட்சுமி உள்பட 5பேருக்கு சொந்தமான நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே  டிராவல்ஸ் அருகே உள்ள  கோயில் நிலத்தையும்  ஆக்கிரமித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் சாலை மறியல் செய்தது குறிப்பிடத்தக்கது.