பாலிவுட்டின் பாட்ஷா , கிங் கான் என பலவாறு புகழப்படுபவர் நடிகர் ஷாருக் கான். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் சினிமாவில் இருந்து ஒரு சிறு ஓய்வில் இருக்கிறார்.
இந்த சூழலில் யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜான் ஆபிரஹாமுடன் ஷாரூக்கான் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஷாரூக் கான். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தனது வீட்டின் முன்பு ரசிகர்களை சந்திப்பது ஷாரூக் கானின் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அது நடக்காமல் போனது .
இதனால் அவரது ரசிகர்கள் ஆன்லைன் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வில் ஷாருக்கை ஆன்லைன் மூலமாக சந்திப்பது, ரசிகர்களுக்கான கேள்வி பதில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர் .