சென்னை:

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதன் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை ரூ.260 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 1940 ஆம் ஆண்டு முதல் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவாவுக்கு என  தனி சுவையுண்டு, இதையடுத்து, தற்போது அதற்கு  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

சமீபத்தில் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில்,  ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா விலையும் ரூ.20 உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே  பால்கோவா கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது பால்விலை உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப் படும் பால்கோவா விலை கிலோ ரூ.260 ஆக விற்பனை செய்யப்படுகிறது.