ஸ்ரீவில்லிபுத்தூர்: அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில், பாஜக உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.

கடந்த 2018 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை வதூறாக பேசியதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  விருதுநகரைச் சேர்ந்தவர், எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணைக்கு எச்.ராஜா தொடர்ந்து ஆஜராகாததால் கோபமடைந்த நீதிபதி பரம்வீர் ,  ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.