கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். “பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பு காரணமாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில், பிரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

சமீபகாலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அந்த விஷயத்தில் கூட பிரச்சினை உருவாகி, இருவரின் பிரிவுக்கும் காரணமாகி இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.