கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் பிஎம் கேர்ஸ் ஃபண்ட்டுக்கு பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல் முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவிகள் வரத் தொடங்கியுள்ளன.

தற்போது ஸ்ரீப்ரியாவின் குடும்பத்தினரான நடிகை லதா, கணவர் ராஜ்குமார் சேதுபதி, மகள் சிநேகா மற்றும் மகன் நாக் அர்ஜுன் ஆகியோர் ஒன்றிணைந்து 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இதில் 15 லட்ச ரூபாய் மத்திய அரசின் நிவாரண நிதியான பிஎம் கேர்ஸ் ஃபண்ட்டுக்கும், 15 லட்ச ரூபாய் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.