மைசூரு:

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டு வேகத்தை மிஞ்சிய வேகத்தில் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீநிவாச கவுடா என்ற இளைஞர் அதிவேகமாக ஓடி சாதனை படைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மாடுகளைக்கொண்டு வழக்கமாக நடைபெறும் கம்பாளா எனப்படும் ஓட்டப்பந்தயத்தில், 142.50 மீட்டர் தொலைவை 13.62 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து உள்ளார். இது உலக ஓட்டப்பந்த சாம்பியன் உசேன் போல்டின் வேகத்தைவிட அதிவேகமானது…

கர்நாடகா மாநிலத்தில் மைசூரு பகுதி மற்றும்  மங்களூரு, உடுப்பி ஆகிய கடலோர பிராந்தியங்களில் உள்பட உள் மாவட்ட மக்களிடையே பிரசித்தி பெற்றது  கம்பாளா எனப்படும் எருமை மாட்டுப் பந்தயம்.  சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி போன்று, கம்பாளா போட்டி கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.

ஆனால், இடையில் சில ஆண்டுகள் இந்த போராட்ட நடத்த வனவிலங்கு ஆர்வலரிகளின் வழக்கு காரணமாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 2017ம் ஆண்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் ஆண்டுதோறும் கம்பாளா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு போட்டி நேற்று தென் கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரி என்ற கிராமத்தில் கம்பாளா போட்டி விமரிசையாக நடைபெற்றது. இந்த போட்டியில்  250 ஜோடி எருமை மாடுகள் மற்றும் அவர்களுடன் அதன் உரிமையாளர்களும்  கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் ஸ்ரீநிவாச கவுடா என்ற 28வயது என்ற இளைஞர் முதல் பரிசை வென்று அசத்தினார். அவர்,  தனது எருமை மாடுகளுடன் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம், கம்பாளா பந்தயத்தில் 30 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை அவர் முறியடித்ததாக  கூறப்படுகிறது.

அதே வேளையில், பிரபல ஓட்டப்பந்தய வீரர்  உசேன் போல்டின் வேகத்தை ஸ்ரீநிவாச கவுடா மிஞ்சி விட்டதாக கூறப்படுகிறது.

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் 100 மீட்டரை கடக்க 9.58 வினாடிகள் எடுத்துக் கொண்டார். இதுதான் அவரது ஒலிம்பிக் சாதனை. இதை கணக்கிடும்போது,  ஸ்ரீநிவாச கவுடா  100 மீட்டரை அவர் 9.55 வினாடிகளில் கடந்து உள்ளார்.

இதை கம்பேர் பண்ணி, ஸ்ரீநிவாசா கவுடா அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்…

இவரைப் போன்றவர்களுக்கு அரசு முறையான  பயிற்சி அளித்தால்,  உலக நாடுகளில் நடைபெறும் ஓட்டப்பந்தயங்களில் இந்தியாவுக்கு பதக்கங்களை வாங்கிக் குதிப்பார்கள்   என்பதில் ஐயமில்லை…

கிராமப்பகுதிகளைச் சேர்ந்த இதுபோன்ற சாமானிய இளைஞர்களின் திறமை வெளி உலகங்களுக்கு தெரியாமலும், அவர்கள் ஊக்குவிக்கப்படாமலும் இருந்து வருவது நமது நாட்டின் சாபக்கேடு போலும்…