கொழும்பு:
லங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில் சிறிசேனா போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில், கடந்த 2019 ஆண்டு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, இலங்கை ரூபாய் மதிப்பில் 10 கோடி ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.