
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி, 111 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற விண்டீஸ் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. துவக்க வீரர்களுள் ஒருவரான லகிரு திருமனே 51 ரன்களை அடித்து ஆடிவருகிறார். துவக்க வீரர் கருணத்ரனே 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தனஞ்சயா டி சில்வா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது டிக்வெல்லா, திரிமன்னேவுடன் ஆடிவருகிறார். பெர்ணான்டோ 4 ரன்களுக்கு ரன்அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை, விண்டீஸ் அணி ஏற்கனவே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]