மும்பை:
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் மும்பை வந்தது.
கடந்த 24ம் தேதி நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தார். அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட் தனி விமானம் மூலம் இன்று மாலை துபாயில் இருந்து புறப்பட்டது. இரவு 9.45 மணிக்கு மும்பை விமானநிலையம் வந்தடைந்தது.

நாளை காலை 9.30 மணி முதல் 12.30 வரை மும்பை செலிபிரசேன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக ஸ்ரீதேவி உடல் வைக்கப்படுகிறது.
மதியம் மாலை 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படும். மாலை 3.30 மணிக்கு இறுதி சடங்கு மும்பை வில்லேபார்லே மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel