லக்னோ:

‘‘சொத்து குவிப்பு விசாரணையில் இருந்து தப்புவதற்காக அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய  தயார் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுவதாக பாஜக முன்னாள் எம்பி ராம் விலாஸ்  வேதாந்தி தெரிவித்துள்ளார்.

அயோத்திக்கு சென்று இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களை சந்திக்க இருப்பதாக ரவிசங்கர்  வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்த வேதந்தி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், அவர்  கூறுகையில், ‘‘இதில் மத்தியஸ்தம் செய்ய ரவிசங்கர் யார்? வெளிநாட்டு நிதியுடன் அவரது தன்னார்வ தெ £ண்டு நிறுவனம் நடத்துவதை அவர் தொடரட்டும்.

அவருக்கு அதிகளவில் சொத்துக்கள் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான      விசாரனையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தோடு ராமர் கோவில் விவகாரத்தில் தலையிட்டுள்ளார்’’ என்றார்.

ராமர் கோவில் இயக்கத்தில் வேதாந்தி  தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த பிரச்னையில் ரவிசங்கர்  தலையீடு தேவையில்லை என்று அவர் நிராகரித்துள்ளார். இவர் மட்டுமின்றி ரவிசங்கரின் இந்த கருத்துக்கு  அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம், விஹெச்பி ஆகியவையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எனினும் இரு தினங்களுக்கு முன்பு மரியாதை நிமித்தமாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை  ரவிசங்கர் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அயோத்தி பிர ச்னையில் அரசு சேர்க்கப்படவில்லை. இதில் தொடர்புடைய அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண  முன்வர வேண்டும். இதற்கு அரசு உறுதுணையாக இருக்கும். இதற்கு அவர்கள் முன்வரவில்லை என்றால்  நீதிமன்றத்தின் முடிவை தான் ஏற்க வேண்டும். நீதிமன்றத்தின் முடிவு எப்படி இருந்தாலும் அதை ஏற்க      நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.