கொழும்பு: நாட்டை பொருளாதார நெருக்குடிக்குள் தள்ளிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு தப்பி ஓடி பல நாடுகளில் தஞ்சமடைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி உள்ளார்.
இலங்கையில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம், இலங்கை தமிழர்களை அழிப்பதிலேயே குறிக்கோளாக செயல்பட்டனர். இதனால் இதனால் இலங்கை அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதற்கு பக்சேக்களின் தவறாக நிர்வாகம் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆட்சி அதிகாரங்களில் இருந்து பக்சேக்கள் குடும்பம் வெளியேறியது. பலர் வெளிநாடுகளுக்கு ஓடினர். மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே போன்றோர் வெளிநாடு செல்ல அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கிடையில், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மாளிகைக்குள் புகுந்ததால், அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் மாலத்தீவு, பின்னர் சிங்கப்பூர், தாய்லாந்து என இருந்த நிலையில், சுமார் ஏழு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் நாடு திரும்பினார்.
நேற்று (2-09-2022) நள்ளிரவில் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு கோத்தபய ராஜபக்சே வந்தடைந்ததாக அந்நாட்டு தகவல்கள் உறுதி செய்துள்ளனர். கோத்தபயவை, அவரது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றதாகவும், ஆயுதமேந்திய ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தலைநகர் கொழும்பின் மையத்தில், முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான வீட்டிற்கு சென்றடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.