ராமேஷ்வரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைநத் மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் ஒருபுறம் தாக்குதல் நடத்துவதுடன், தமிழக மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இதற்கிடையில், இலங்கை கடற்கொள்ளையினரும் அவ்வப்போது தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள், வலைகளை பறித்து செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.
இநத் நிலையில், நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்கொள்ளை யர்கள் தமிழக மீனவர்களை தாக்கியதுடன், அவர்களை வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை பறித்து சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், அதிக காயம் அடைந்த மீனவர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் மருத்துவமனைக்கு வந்த விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..