கொழும்பு:

லங்கை சுதந்திர தினத்தன்று வழக்கமாக சிங்களம் மற்றும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டு முதல் தமிழில் தேசியகீதம் பாடப்படாது என்று அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இங்கு இலங்கை வாழ் தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடப்படாது என்ற இலங்கை அரிசு அறிவித்து,  பிரிவினைவாதத்தை பலப்படுத்தியுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர் அமைப்புகளும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், இலங்கை அரசின் அறிவிப்புக்கு  எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இலங்கை தமிழர்கள், தமிழ் மொழியில் இலங்கை தேசிய கீதத்தை பாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

Credit: – Gobal Tamil Video

இலங்கை அரசு தமிழில் தேசிய கீதம் பாட விதித்த தடை செய்திக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.patrikai.com/sri-lanka-drops-tamil-national-anthem-in-independence-day-president-gotabhaya-rajapaksa/

 

[youtube-feed feed=1]