வாடிகன்

த்தோலிக்க தலைவரான போப் ஃப்ரான்சிஸ் வாடிகன் அரண்மனையை ஆதரவற்றோர் இல்லமாக மாற்றி உள்ளார்.

கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைமையகமான வாடிகன் இத்தாலி நாட்டின் அருகே அமைந்துள்ளது.  இங்குக் கத்தோலிக்க தலைவரான போப் ஆண்டவர் வசித்து வருகிறார்.  இந்த நகரம் தனி நாடு அந்தஸ்தைப் பெற்றுள்ளது.   இந்த நகரில் ஒரு மிகப் பெரிய தேவாலயம் அமைந்துள்ளது.   அந்த தேவாலயத்துக்கு பாலசோ மிக்லியோரி என்னும் ஒரு அரண்மனையை  ஒரு குடும்பத்தினர் அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்.

மிகவும் அருமையான  வேலைப்பாடுகள் கொண்ட இந்த அரண்மனை தற்போது புதுப்பிக்கப்பட்டது.   உலகின் மிகவும் வசதியான, பிரம்மாண்டமான மற்றும் எழிலான இந்த அரண்மனையைத் தங்கும் விடுதியாக மாற்றினால் தேவாலயத்துக்கு ஏராளமான வருமானம் கிடைக்கும் எனப் பலரும் யோசனை தெரிவித்தனர்.   ஆனால் தற்போதைய போப் ஆண்டவரான ஃப்ரான்சிஸ் அதை ஒப்புக் கொள்ளவில்லை.

மாறாக அவர் இந்த அரண்மனையை ஆதரவற்றோர் வசிக்கும் இல்லமாக அறிவித்துள்ளார்.  சென்ற நவம்பர் மாதம்  இந்த அரண்மனை புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது.  இந்த அரண்மனையை ஆதரவற்றோர் வசிக்க போப் வழங்கி உள்ளார்.   இங்கு வசித்து வருபவர்களில் ஒருவரான மரியோ பிரஸா என்னும் 51 வயது நபர் இங்குத் தாம் மிகவும் வசதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு நோய் தொற்று காரணமாகக் கால்களை இழந்த பிரஸாதனக்கு கிடைத்து வந்த ஊனமுற்றோர் உதவித் தொகையான 300 டாலர்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்.  தற்போது அவரைப் போல் 50 பேர் இந்த அரண்மனையில் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு  தற்போது ஒரு தனி படுக்கை,  கழிப்பறை போன்ற வசதிகள் கிடைத்துள்ளதாக பிரசோ தெரிவித்துள்ளார்.