கொழும்பு: தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய அரசு அமைந்துள்ளது. ஏற்கனவே நாட்டின் புதிய ஜனாதிபதியாக கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்கா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதையடுத்த நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சியே ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இதைத்தொடர்ந்து, பிரதமராக ஹரினி அமரசூரியா பதவி ஏற்றதுடன், அவருடன் 21 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைச்சரவையில், வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைச்சரவையில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் தமிழர்களாவர்.
இந்த புதிய அமைச்சரவை பதவி ஏற்று இரு நாட்களே ஆன நிலையில், தமிழக மீனவர்கள் விசயத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் கட்டமாக மன்னார் துறைமுகத்தில் உள்ள 5 படகுகள், மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள 8 படகுகள் இலங்கை கடற்படை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இலங்கை அரசின் இந்த உத்தரவால், தமிழக மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் படித்தவர்: இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய…