கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவுக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு 4 மாதங்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா சிறப்பாக விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டது. எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. அப்போது, முதுகெலும்பில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 4 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து சமீரா நாடுதிரும்பினார். தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் மற்றொரு இலங்கை வீரர் தம்மிகா பிரசாத்தும், இலங்கை திரும்பியுள்ளார்.