கொழும்பு:
இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இன்று 528 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 480 ஆக உள்ளது. இதுவரை 73 ஆயிரத்து 456 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குனம்டைந்துள்ளனர். இருபினும், 5 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தோற்றால் பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]