கொழும்பு:
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, கொரோனா காரணமாக இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக ஆகஸ்டு 5ந்தேதி திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 6ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என மாற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று குறையாக நிலையில், பின்னர் ஆகஸ்டு 5ந்தேதிக்கு வாக்குப்பதிவு தேதி மாற்றி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை கைப்பற்ற 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 25 அரசியல் கட்சியை சேர்ந்த 3 ஆயிரத்து 652 வேட்பாளர்களும், 313 சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 3 ஆயிரத்து 800 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
அதிக அளிவலான வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 924 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
குறைந்த அளவிலான வேட்பாளர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அந்த மாவட்டத்தில் 152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 12 ஆயிரத்து 894 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 773 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன
பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் புதன்கிழமை அதாவது ஆகஸ்டு 5ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6ம் தே கதி காலை 7.00 மணிக்கு அல்லது 8.00 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.