கொழும்பு:
பரபரப்பான சூழலில் இலங்கை பாரளுமன்றம் இன்று கூடுகிறது.
இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கை பாரளுமன்றம் கூட்டம் இன்று நடக்கிறது.
அப்போது, பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான பொதுஜன பெருமுன கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.
நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால், பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவை பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.