எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ட்விட்டர் பதிவுகளை மாற்றம் செய்ய ‘எடிட் பட்டன்’ வசதி கொண்டுவரப்படும் என்று அந்நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பே எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.

பின்னர் ஒரு பெரும்தொகைக்கு ட்விட்டரை வாங்கியதும், அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் நீக்கப்படுவார் என்று செய்தி வெளியானது நிறுவனத்தை வாங்கிய ஓராண்டுக்குள் அவர் நீக்கப்பட்டால் அவருக்கு எலான் மஸ்க் ரூ. 320 கோடி இழப்பீடாக தரவேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு அவரது நீக்கம் இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் பயனர்களுக்கு கட்டணம் விதிக்க ஆலோசித்து வருவதாக இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

இதுகுறித்து அந்த பதிவில், “சாதாரண பயனர்களுக்கு கட்டணம் ஏதும் விதிக்கும் எண்ணம் இல்லை” என்றும் “தொழில்முறை மற்றும் அரசு சார்பில் பதிவிடும் பயனர்களுக்கு சற்று கூடுதலான கட்டணம் நிர்ணயிக்கப்படும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.