கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இலங்கையில் மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கி இருக்கிறது.
பொலன்னருவாவின் வடக்கு மத்திய பிராந்தியத்தில் உள்ள காண்டகாடு என்ற மருந்து மறுவாழ்வு மையத்தில் 252 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மையத்தில் உள்ள 338 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 252 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் நலகா கலுவேவா கூறியுள்ளார்.