கொழும்பு:

கிறிஸ்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையில் உள்ள பல்வேறு தேவாயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. உலகையே அச்சுறுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், இளைஞர் ஒருவன் தோளில் மாட்டிய சுமையுடன் தேவாலயத்திற்குள் செல்லும் காட்சி அமைந்துள்ளது. அதன்பிறகே வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக, அந்த இளைஞன்தான் தற்கொலை பயங்கரவாதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இலங்கை தலைநகர் கொழும்பு கடந்த ஞாயிறன்று  3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்327 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர குண்டுவெடிப்புக்கு இந்தியா,  அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்றதாக வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,   நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அதில், இளைஞன் ஒருவன்  வெடி குண்டை சுமக்க முடியாமல் நடந்து வந்து தேவாலயத்தில் நுழைகிறார். பின்னர் அங்கு பிரார்த்தனைக்காக கூடியுள்ள மக்களை கடந்து உள்ளே செல்கிறார். பின்பக்கமாக மாட்டியுள்ள பையில் வெடிப்பொருள்களை வெடிக்க செய்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.