கொழும்பு:

லங்கையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23ந்தேதி  ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர் எகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமுக வலைதளங் கள் உன்னிப்பாக கண்காணிப்பட்டு பல நேரங்களில் முடக்கப்பட்டும் வருகிறது.

கடந்த  ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்க இலங்கையை சேர்ந்த தவ்ஹீத் ஜமாத் உதவி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணியவும் அரசு தடை விதித்துள்ளது.

மேலும் குண்டு வெடிப்பு தொடர்பாக பல இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு அடிக்கடி சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகள் இஸ்லாமியர்கள் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பல இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. நேற்று முன்தினம் கூட பேஸ்புக்கில் பரவிய வதந்தி காரணமாக இரு இனத்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பபவங்களால் நாடு முழுவதும்  அமைதியின்மை நீடித்து வருகிறது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இனக்கலவரத்துக்கு சமூக வலைதளங்கள் மட்டுமே காரணம் என்று குற்றம்சாட்டும் இலங்கை அரசு அதில் பரப்பப்படும் வதந்திகளாலேயே இதுபோன்ற மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளது. இதன் காரணமாக அங்கு பல இடங்களில் சமூக வலைதளங்கள் அவ்வப்போது முடக்கப்பட்டு வருகிறது.

இது நாட்டில் சமூக வலைதளங்கள் மூலம் பணியாற்றி வரும் மக்களிடையே  கடும் அதிப்தியை ஏற்டுத்தி உள்ளது. ஆனால், இலங்கை அரசோ மக்களிடையே வேறுபாடு ஏற்படாமல் அமைதி நிலவ சமுக வலைதளங்கள் முடக்கப்படவேண்டிய துஅவசியம் என்று தெரிவித்து உள்ளது.