கொழும்பு:
உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார். இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமைக கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த கொடூர தற்கொலைபடை குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ள நிலையில், அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா உள்பட சில நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தும், அதை உதாசினப்படுத்தியதால், இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இது இலங்கையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா இலங்கை காவல்துறை தலைவர், ராணுவ செயலர் ஆகியோரை ராஜினாமா செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குண்டு வெடிப்பு குறித்து புலனாய்வு தகவல் அளித்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காததால், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாண்டோ, காவல்துரை தலைவர் பூஜீத் ஐயசுந்தரையும் பதவி விலகுமாறு குறிப்பிட்டுள்ளார்.