கொழும்பு:
கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி) கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் 2019 மே மாதம் கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (MoC) கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பணியைத் தனியாருக்கு வழங்கத் துறைமுகத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதையடுத்துக் கிழக்குச் சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் முடிவை இலங்கை அரசு கைவிட்டுள்ளது.

அதற்குப் பதில் மேற்குச் சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தை இந்தியா, ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.