புதுடெல்லி: சென்னை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் ஐதராபாத் அணி, 5 ஓவர்களில், 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களை சேர்த்துள்ளது.
சென்னை அணியைப் பொறுத்தவரை, புள்ளிகள் பட்டியலில், தற்போதைய நிலையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், ஐதராபாத் அணியோ, பரிதாப நிலையில் இருக்கிறது.
சென்னை அணியில் இம்ரான் தாஹிருக்குப் பதிலாக, மொயின் அலி மீண்டும் வந்துள்ளார். இந்தப் போட்டி, கொரோனா பாதிப்பு மிக அதிகமுள்ள டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணி பேட்டிங்கில், பேர்ஸ்டோ, 7 ரன்களில் அவுட்டாக, தற்போது, கேப்டன் டேவிட் வார்னரும், மணிஷ் பாண்டேவும் ஆடிவருகின்றனர். சென்னை அணி, இப்போட்டியில் வென்றால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.