புதுடெல்லி: சென்னை அணிக்கெதிராக முதலில் ஆடிவரும் ஐதராபாத் அணி, 14 ஓவர்கள் கடந்த நிலையில், 1 விக்கெட் மட்டுமே இழந்திருப்பினும், 102 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

அந்த அணியின் மணிஷ் பாண்டே, 35 பந்துகளில், 50 ரன்களை அடித்து ஆடிவருகிறார். டேவிட் வார்னர், 44 பந்துகளில் 39 ரன்களை அடித்து களத்தில் உள்ளார்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில், எளிதாக விக்கெட் எடுக்க முடிந்த சென்னை பெளலர்களால், இந்தமுறை விக்கெட் எடுக்க முடியவில்லை. அதேசமயம், யாரும் ரன்களை அள்ளிக் கொடுத்துவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை சாம் கர்ரனுக்கு மட்டுமே 1 விக்கெட் கிடைத்துள்ளது.