கொச்சி: மேட்ச் பிக்சிங் காரணமாக விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை காலத்தை நிறைவுசெய்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தடைக்குப் பின்னர் முதன்முதலாக கேரள கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் உள்ளூர் டி-20 தொடரில் பங்கேற்கவுள்ளார்.
அந்தப் போட்டித் தொடர் ஆழப்புலாவில் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ரீசாந்தின் தடைகாலம் முடிவுக்கு வந்தது.
கேரள மாநில கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் சச்சின் பேபியை கேப்டனாகக் கொண்ட கேசிஏ டைகர்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
கேசிஏ பிரசிடென்ட் கோப்பை டி-20 தொடரில், கேசிஏ ராயல்ஸ், கேசிஏ டைகர்ஸ், கேசிஏ டஸ்கர்ஸ், கேசிஏ ஈகிள்ஸ், கேசிஏ பேன்தர்ஸ் மற்றும் கேசிஏ லயன்ஸ் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன.