பெங்களூரு
பெங்களூரு – திருவனந்த;புரம் இடையே கோடைக்கால சிற.ப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்ற1ன.
பெங்களூரு-திருவனந்தபுரம்(வண்டி எண்.06555) வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 30-ந்தேதி வரை பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் சனிக்கிழமைகளில் திருப்பூருக்கு அதி காலை 4.03 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்படும்.
திருவனந்தபுரம்-பெங்களூரு(06556) வாராந்திர சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.53 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும்.”
எனஅறிவிக்கப்பட்டுள்ளது.