மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் – V என்ற கொரோனா தடுப்பு மருந்து 91.4% என்ற அளவில் பயனளிப்பதாக, ஆய்வக பரிசோதனைகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டில், உலகிலேயே முதன்முதலாக தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கிய நாடு என்ற பெயரைப் பெற்றது ரஷ்யா.
இந்த மருந்து தொடர்பான பரிசோதனையில் மொத்தம் 22714 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு, முதல் மற்றும் இரண்டாம் டோஸ் மருந்துகள் செலுத்தப்பட்டன.
இத்தகைய ஆய்வுகளின் முடிவில், இம்மருந்தானது, 91.4% என்ற அளவிற்கு பயனளிக்கத்தக்கது என்பது தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.