சிம்லா:

வயிற்று வலியால் அவதிப்பட்டருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், அவர் வயிற்றுக்குள் இருந்து ஸ்பூன்கள், ஸ்க்ரூ டிரைவர் மற்றும் இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டன.


இமாச்சலப் பிரதேசத்தில் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வயிற்று வலி சிகிச்சைக்காக வந்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவர் வயிற்றுக்குள் இருந்து ஸ்பூன்கள், ஸ்க்ரூ டிரைவர்கள், இரும்புக் கம்பிகள் இருந்தது கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அவற்றை டாக்டர்கள் அகற்றினர்.
அந்த நபரின் குடும்பத்தார் கூறும்போது, சில தினங்களுக்கு முன்பு அந்த நபர் கத்தியை விழுங்கி விட்டதாகத் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கூறும்போது, வயிற்றுக்குள் இருந்து எடுத்தவற்றை அவர் பார்க்கவே இல்லை. எதையும் கண்டு கொள்ளாமல் புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்.
தற்போது அவர் நலமாக உள்ளார் என்றனர்.