சென்னை:
ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வார பயணமாக இமயமலைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், ஆன்மிக சாமியார் மலையேறிவிட்டார் என்று நக்கலாக பதில் அளித்தார்.
டில்லியில் நடைபெற்ற உள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் ஜெயக்குமார் விமான நிலையம் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் ரஜினிகுறித்துகேள்வி எழுப்பினர். அதற்கு, ரஜினிகாந்த் மலையேறி விட்டார் என்று கிண்டலாக பதில் அளித்தார்.
மேலும், ஜிஎஸ்டி மூலம் தமிழகத்திற்கு ரூ.50,147 கோடி வருவாய் இதுவரையில் கிடைத்துள்ளது என்றும், இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி தவழும் மாநிலமாக திகழ்கிறது என்றும் கூறினார்.