டெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 230 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலான நாடுகளில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தைக்காட்டி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் கோரதாண்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக கொரோனா பாதிப்புகளில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
கண்ணுக்குத்தெரியாக வைரஸான கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் உடல்நலம் மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 1,90,535 ஆக அதிகரித்து உள்ளது.
அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 230 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயரிழந்தோர் எண்ணிக்கை 5,394 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,835 பேர் குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து இதுவரை 91,818 பேர் குணமடைந்து உள்ளனர்.
தற்போது நோய் பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 93ஆயிரத்து 322 பேர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 2,286 பேர் உயிரிழந்துள்ளனர். 29,329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள்ளனர்.
தமிழகத்தில் 22,333 பேரும் டெல்லியில் 19,844 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.